மோடி, சீன அதிபர் வருகை: மூடப்படும் சிற்ப கூடங்கள்…

 

மோடி, சீன அதிபர் வருகை: மூடப்படும் சிற்ப கூடங்கள்…

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் விதமாக, மத்திய உளவுத் துறை அப்பகுதி முழுவதிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அக்டோபர் 11, 12 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த மாமல்லபுரம் வரவிருக்கின்றனர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் விதமாக, மத்திய உளவுத் துறை அப்பகுதி முழுவதிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 

India and China president

மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க 13 ஆம் தேதி வரை செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Sculptures

இந்நிலையில் நேற்று, முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சீன நாடு பாதுகாப்பு குழுவினரும் இங்கே தங்கப் போவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால்,  இன்று முதல் இரு நாட்டு அதிபர்களும் வந்து செல்லும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாக மாமல்லபுர சிற்ப வளாகங்களை மூட, கலெக்டர் பொன்னையா தொல்லியல்துறைக்குப் பரிந்துரை செய்துள்ளார். 

Sculptures