மோடி, சீன அதிபர் வருகை: பேனர் வைக்க அனுமதி அளித்த உயர்நீதி மன்றம்..

 

மோடி, சீன அதிபர் வருகை: பேனர் வைக்க அனுமதி அளித்த உயர்நீதி மன்றம்..

வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக மாமல்லபுரம் வரவிருக்கின்றனர். 

சுபஸ்ரீயின் விபத்திற்குப் பிறகு பேனர்கள் வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக மாமல்லபுரம் வரவிருக்கின்றனர். 

India and China president

பேனர் வைப்பதற்குக் கண்டனம் தெரிவித்த அதிமுக கட்சியினரே, இரு நாட்டு அதிபர்களையும் வரவேற்க பேனர்கள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

Chennai high court

அதில் உயர் நீதி மன்ற நீதிபதிகள், அரசியல் கட்சி சார்பாக பேனர் வைக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேனர் வைக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.