மோடி – சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்த காரணம் இதுதானாம்!?

 

மோடி – சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தை  தேர்வு செய்த காரணம்  இதுதானாம்!?

இந்தியா சீனா உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரத்தைத் தேர்வு யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா சீனா உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரத்தைத் தேர்வு யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

modi

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள்  (அக்12) ஆகிய தேதிகளில் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சீன அதிபருக்கு   உற்சாக வரவேற்பு அளிப்பதுடன்   கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்க்கவுள்ளனர். 

mahabalipuram

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு ஏன்  மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தார்கள்? தேர்வு செய்தது யார்  எதிர் கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளன. உண்மையில் இந்த முடிவை எடுத்தது இந்திய  அரசு கிடையாது. இந்த முடிவை எடுத்தது சீனஅரசு. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள லுவா ஸாகுவிதான் தமிழகத்தின் மாமல்லபுரத்தைத் தேர்வு செய்துள்ளார். இவர் இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதராக இருந்தவர்.

இவர் புதுச்சேரியிலுள்ள ஆரோவில்லில் தங்கி படித்துள்ளார். இவருக்கு மாமல்லபுரம் நன்கு பரிட்சயமான இடமாகவும் இருந்துள்ளது. பண்டைக்காலத்தில் சீன -இந்தியாவின் வணிக வரலாற்றை நன்கு அறிந்த லுவா ஸாகுவி தான் அறிவுரைப்படியே இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடப்பதாகத் தெரிகிறது.