மோடி சர்கார்: புதிய அமைச்சரவையின் பட்டியல் இதோ!

 

மோடி சர்கார்: புதிய அமைச்சரவையின் பட்டியல் இதோ!

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

புதுடெல்லி:  நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

modi

மக்களவைத் தேர்தலின்  வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் அவருடன் சேர்ந்து  25 கேபினட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்பு வகிக்கும் 9 அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் பதவியேற்றனர். 

மோடி தலைமையிலான அரசில் ஏற்கனவே பதவி வகித்த அமைச்சர்களுக்கு மாற்றுப் பதவியும், புதிதாகச் சிலருக்கும்  பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை பாஜகவின் தேசிய  தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராகவும், நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல் கீழ்க்கண்டவாறு:-

amitsha

 

  • பிரதமர் மோடி – பணியாளர் துறை, ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு, அணுசக்தி, விண்வெளி
  • ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை
  • அமித்ஷா – உள்துறை
  • நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்
  • நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்

smiriti

  • சதானந்தா கவுடா – ரசாயனம் மற்றும் உரத்துறை
  • ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை
  • ராம்விலாஸ் பஷ்வான் – நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
  • நரேந்திர சிங் தோமர் – வேளாண் மற்றும் விவசாய நலன் மற்றும் ஊரக மேம்பாடு
  • ஸ்மிரிதி இரானி – மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு

 

piyush

  • ரவிசங்கர் பிரசாத் – சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • கர்ஷிம்ராட் கார் படால் – உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகம்
  • தாவர் சந்த் கெலாட் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
  • முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம்
  • பியூஸ் கோயல் – ரயில்வே, வர்த்தகம், தொழில்துறை

 

garetnra

  • ஹர்ஷ்வர்தன் – சுகாதாரத்துறை
  • பிரகாஷ் ஜவடேகர் – மத்திய சுற்றுச்சூழல், தகவல் ஒலிபரப்பு
  • அர்ஜூன் முண்டே – பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
  • ரமேஷ் போக்ரியால் – மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
  • தர்மேந்திர பிரதான் – பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

 

rajendra

  • பிரல்கேட் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்
  • மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
  • அரவிந்த கணபத் ஷவாந்த் – கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள்
  • கிரிராஜ் சிங் – கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை
  • கஜேந்திர சிங் – ஜெல் சக்தி