மோடி உயிருக்கு அச்சுறுத்தல்: மீன் பிடிக்க தடைகோரி பங்குத் தந்தைக்கு கடிதம் ஏன்?

 

மோடி உயிருக்கு அச்சுறுத்தல்: மீன் பிடிக்க தடைகோரி பங்குத் தந்தைக்கு கடிதம் ஏன்?

அரசு விழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: அரசு விழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். வட மாநிலங்களில் எல்லாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் மோடி, இன்று அரசு விழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரி வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து ஆரோக்கியபுரம் பங்குத் தந்தைக்கு கடிதம் அனுப்பியுள்ளார் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்.

fishing

அதில், பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர் மீது கடல் வழியாக தாக்குதல் நடத்த வாய்ப்பிருந்தால் அதனை தவிர்த்திடவும், அந்நிய படகுகளின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் தங்கள் (பங்குத் தந்தை) கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை 28.2.19 மற்றும் 1.3.19 ஆகிய இரண்டு தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தவும், ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

ஒக்கி புயல் பாதிப்பின் போது சரியான நடவடிக்கை எடுக்காததால், மோடியின் மீது கன்னியாகுமரி மீனவர்கள் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Gobackmodi டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது, தமிழகம் தொடர் மோடி எதிர்ப்பில் உள்ளது இதன் மூலம் வெளிப்படுகிறது.