மோடி உத்தரவுக்காக காத்திருந்த தேர்தல் ஆணையம்; அவசரமாக தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்தது ஏன்?!

 

மோடி உத்தரவுக்காக காத்திருந்த தேர்தல் ஆணையம்; அவசரமாக தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்தது ஏன்?!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே போன தேர்தல் ஆணையம், அவசரமாக இன்று தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல்

 

elect

நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் வாரத்திலேயே அறிவிக்கப்படும் என்று பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்தன. ஆனால் இன்று காலை வரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான பின்னணி காரணங்கள் குறித்து இப்போது தெரியவந்துள்ளன.

கடந்த 2014 ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4 ம் தேதியே அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 7 ம் தேதி தொடங்கி மே மாதம் 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஏப்ரல் மாதம் 24 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்துவிடும் என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சில கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டன.

காங்கிரஸ் தரப்பு விமர்சனம்

 

ahmed

17-ஆவது மக்களைவையை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அடுத்த மாதத்தில் தொடங்கி நடத்தப்படவேண்டும். இதற்கான அறிவிப்பை குறைந்த பட்சம் மார்ச் 8-ம் தேதியாவது தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் அப்படி எதுவும் வெளிவரவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், பிரதமரின் சுற்றுப்பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்த பின்புதான் தேர்தல் தேதியை அறிவிக்குமா தேர்தல் ஆணையம் என கேள்வி எழுப்பினார்.

மோடி மீது குற்றச்சாட்டு 

modi

உத்திரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், அந்நிகழ்வுகள் முடியும் வரை அவசரப்படவேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பறந்துள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 10-ஆம் தேதியானபின்னரும் அறிவிக்கப்படாமல் இருந்ததாம்! 

இந்நிலையில் இன்று மாலை தேதி அறிவிக்கப்படும் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு மேலும் தாமதித்தால், மக்கள் மத்தியிலும் அவப்பெயர் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.