மோடி இந்தியாவின் தந்தை – ராஜேந்திர பாலாஜி

 

மோடி இந்தியாவின் தந்தை – ராஜேந்திர பாலாஜி

இந்தி திணிப்பை எங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. இந்தி திணிப்பை தங்கள் அரசால் மற்றுமே எதிர்க்க முடியும். திமுக-வை போன்று நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்தும் வெளியில் தூற்றிப் பேசியும் தங்களுக்கு பழக்கமில்லை. மோடியின் வீட்டிற்கு செல்வதற்கு தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மோடியை தங்கள் கட்சியினர் தந்தையை போன்று மதிக்கிறோம்.

பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தையாக பார்க்கிறோம் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, “அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுக-வுக்கு தான் உரிமை இருக்கிறது. திமுகவினர் தற்போது அண்ணா என்று கூறி வருகின்றனர், ஆனால் முன்பு அவரையே விமர்சித்துப் பேசியுள்ளனர்.அதிமுக மக்களுக்காக போராடும் கட்சி, திமுக-வை போன்ற விளம்பரத்துக்காக உழைக்கும் கட்சி அல்ல” என்று கூறினார்.​​ராஜேந்திர பாலாஜி

மேலும் பேசிய அவர் ” இந்தி திணிப்பை எங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. இந்தி திணிப்பை தங்கள் அரசால் மற்றுமே எதிர்க்க முடியும். திமுக-வை போன்று நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்தும் வெளியில் தூற்றிப் பேசியும் தங்களுக்கு பழக்கமில்லை. மோடியின் வீட்டிற்கு செல்வதற்கு தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. மோடியை தங்கள் கட்சியினர் தந்தையை போன்று மதிக்கிறோம் ” என்று
அவர் தெரிவித்தார்.

மோடி தான் எங்கள் டாடி என்று முன்பே ராஜேந்திர பாலாஜி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. மோடியை பற்றி புகழ்தே வரும் இவர் மோடிக்கு சலாம் போடும் கோஷ்டிகளில் ஒருவர் என்று திமுக-வினர் விமர்சித்து வருகின்றனர்.