மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன: மம்தா பானர்ஜி

 

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன: மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

கொல்கத்தா: பிரதமர் மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெற்றது.

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ரூ பேசினார்.

மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, மோடி ஆட்சியின் முடிவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. புதிய விடியல் வர உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம். இது உறுதி என்றார்.

மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது என குற்றம் சாட்டிய மம்தா, நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்றார்.

பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது என தெரிவித்த மம்தா, மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.