மோடி அமெரிக்க பயணம் – வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

மோடி அமெரிக்க பயணம் – வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 22 ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மோடி உறையாற்ற உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மோடி உறையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தது.
மோடி, டிரம்ப்

பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். 22ஆம் தேதி மோடி நலமா என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாட உள்ளார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் இணையவுள்ளதாக வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது.இந்த ஆண்டிலே மோடியும் டிரம்பும் இரண்டாவது முறையாக சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் போக்கு,பொருளாதாரம், உள்ளிட்டவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரமாண 370, 35ஏ சட்டத்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டதலிருந்தே இரு நாட்டுக்கும் போர் மூலம் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது.