மோடி அணிந்த கண்ணாடியின் விலை ரூ.1.6 லட்சமாம்!

 

மோடி அணிந்த கண்ணாடியின் விலை ரூ.1.6 லட்சமாம்!

இன்று இந்தியா முழுக்க சூரிய கிரகணம் தெரிந்தது. பிரதமர் மோடி இதைக் காண இன்று காலையில் ஆர்வத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தார். ஆனால், மேகமூட்டத்துடன் இருந்ததால் ஏமாற்றமடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கண்ணாடி அணிந்திருந்த படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

சூரிய கிரகணத்தைக் காண்பதற்காக வந்த மோடி அணிந்திருந்த கூலிங் கிளாஸின் விலை 1.6 லட்சம் ரூபாய் இருக்கும் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இன்று இந்தியா முழுக்க சூரிய கிரகணம் தெரிந்தது. பிரதமர் மோடி இதைக் காண இன்று காலையில் ஆர்வத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தார். ஆனால், மேகமூட்டத்துடன் இருந்ததால் ஏமாற்றமடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அப்போது அவர் கண்ணாடி அணிந்திருந்த படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அந்த படத்தை ஸூம் செய்து பார்த்து அது என்ன பிராண்ட், மாடல் என்பதை நெட்டிசன்கள் ஆய்வ செய்துள்ளனர். அதே பிராண்ட் கண்ணாடியின் விலை ரூ.1.6 லட்சம் என்று தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த கண்ணாடியாம் அது.

May batch sunglasses

இதைத் தொடர்ந்து பலரும் மோடியின் கண்ணாடி பற்றிய பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஏழைத் தாயின் மகன் என்று கூறிக்கொள்ளும் மோடி ரூ.1.6 லட்சம் மதிப்பிலான கண்ணாடியை வாங்கியது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.