மோடியை விமர்சிப்பதா… சீன அதிபருக்கு எழுத வேண்டியதுதானே! – கொந்தளித்த பா.ஜ.க-வின் காயத்ரி ரகுராம்

மோடியை விமர்சிப்பதா… சீன அதிபருக்கு எழுத வேண்டியதுதானே! – கொந்தளித்த பா.ஜ.க-வின் காயத்ரி ரகுராம்

மோடியை விமர்சித்து எப்படி கமல் கடிதம் எழுதலாம், நீங்கள் ஏன் சீன அதிபருக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

மோடியை விமர்சித்து எப்படி கமல் கடிதம் எழுதலாம், நீங்கள் ஏன் சீன அதிபருக்கு கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்களைக் காக்க தவறிவிட்டீர்கள் என்று மிக காட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இவ்வளவு காட்டமாக கமல் ஏன் விமர்சித்தார் என்று பலரும் அது பற்றி விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமலின் கடிதத்துக்கு தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை பிக்பாஸ் சீசன் 1 புகழ் காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்துள்ளார்.

kamlahassan

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி எப்படி அவர்கள் தோல்வியடைந்தார்கள் என்று சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்ப்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்குக் கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ, எம்.பி-க்களுக்கு முதலில் கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு பிரச்னை என்றால் முதலில் மாநில அரசில் முறையிடுங்கள். 

அவர்களால் எதுவும் நடக்கவில்லை என்றால் மோடிஜிக்கு கடிதம் எழுதுங்கள். மோடிஜிக்கு கடிதம் எழுதுவது ஃபேஷன் போன்று டிரெண்ட் ஆகிவிட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருவதைக் காணத் தவறிவிட்டீர்களா?” என்று கூறியுள்ளார்.