‘மோடியை விமர்சனம் செய்யும் போக்கு போகியோடு போகட்டும்’ – தமிழிசை

 

‘மோடியை விமர்சனம் செய்யும் போக்கு போகியோடு போகட்டும்’ – தமிழிசை

மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் கொண்டாடினார். 

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம், பாஜகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மோடியை விமர்சனம் செய்யும் போக்கு போகியோடு போகட்டும் என்றும் மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொடநாடு விவகாரத்தில் விரக்தியின் காரணமாகவே முதல்வரை பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்துவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.