மோடியை விட்டால் மக்களுக்கு வேறு யாரும் இல்லை; ஹெச்.ராஜா கூல் பேட்டி!

 

மோடியை விட்டால் மக்களுக்கு வேறு யாரும் இல்லை; ஹெச்.ராஜா கூல் பேட்டி!

இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி இந்தியார்கள் தான் என சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

சென்னை: இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி இந்தியார்கள் தான் என சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான சிவகங்கை தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் ஹெச்.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிபிசி தமிழுக்கு ஹெச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ள சிவகங்கைத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறீர்கள். வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, மிகப் பிரகாசமாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைப் தவறவிட்டேன். அப்போது ப.சிதம்பரத்தைவிட ஒரு லட்சம் வாக்குகளை அதிகம் பெற்றேன்.

karti chidambaram

கடந்த முறை போட்டியிட்டபோது தோற்றாலும் கார்த்தி சிதம்பரத்தைவிட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றேன். இந்தப் பகுதியில் அ.தி.மு.க. – பா.ஜ.க. வாக்குகளை இணைத்தால் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்புக் கொடுத்தது, காங்கிரஸ்காரர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, பல வழக்குகளை அவர் தற்போது சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இப்போது மோடியை விட்டால் வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இப்போது வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்தால் அந்த அரசு கவிழ்ந்து விடும் எனவும் ராஜா தெரிவித்துள்ளார்.

pmmodi

நீங்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறீர்கள். அது உங்களுக்கு எதிராக அமையாதா? என்ற கேள்விக்கு, நான் அப்படி ஏதும் பேசவில்லையே என கூலாக விளக்கமளித்துள்ளார் ராஜா.

கேள்வி கேட்பவர்களை ஆன்டி இந்தியன் என்று சொல்கிறீர்கள்.. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி இந்தியன் தான். அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து பின்லேடனைக் கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின்லேடனின் உடல் எங்கே எனக் கேட்கவில்லை.

ஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர். இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா. அவர்கள் ஆன்டி இந்தியார்கள் தான் என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார்.

இதையும் வாசிங்க

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?