மோடியை வரவேற்க 70 ஆயிரம் அகல் விளக்கு… வண்ணமயமான கோக்ரஜார்!

 

மோடியை வரவேற்க 70 ஆயிரம் அகல் விளக்கு… வண்ணமயமான கோக்ரஜார்!

இந்தநிலையில் அஸ்ஸாம் மாநிலம் போடோ பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நேற்று மோடி வந்தார். அவரை வரவேற்க கோக்ரஜார் சாலைகளில் வண்ணமயமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க சாலை நெடுக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் வைக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாமில் கலவரம் வெடித்தது. இதனால், பிரதமர் மோடியின் அஸ்ஸாம் பயணங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் அஸ்ஸாம் மாநிலம் போடோ பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நேற்று மோடி வந்தார். அவரை வரவேற்க கோக்ரஜார் சாலைகளில் வண்ணமயமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டதாக பா.ஜ.க-வினர் கூறுகின்றனர்.

 

இது தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தமிழக பா.ஜ.க மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஓர் தலைவனின் மீது மாறாத பற்றும் , அன்பும்,நம்பிக்கையும் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரதமர் திரு மோடி அவர்களை வரவேற்க அஸ்ஸாம் மாநிலம்  கோக்ரஜார் நகரில் 70,000 அகல்விளக்கு ஏற்றி உற்சாக வரவேற்பு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ஸாமின் போடோ பகுதி மேம்பாட்டுக்காக ரூ.1500 கோடி வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.