மோடியை சந்தித்த சிந்தியா… மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்கிறது! கொண்டாட்டத்தில் பா.ஜ.க

 

மோடியை சந்தித்த சிந்தியா… மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்கிறது! கொண்டாட்டத்தில் பா.ஜ.க

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

மத்தியப் பிரதேசத்தில் 16 எம்.எல்.ஏ-க்களை பிரித்து பெங்களூரு அழைத்துச் சென்றதன் மூலம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது. அடுத்த முதல்வராக வருவாரா அல்லது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

bjp modi

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். தற்போது ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிடம் 16 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விடம் உள்ளனர். இதன் மூலம் 20 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும். தற்போதைய நிலையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும். இதனால், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

 

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலனாக ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக பா.ஜ.க உறுதி அளித்துள்ளது. மேலும் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க சார்பில் சீட் வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் பதவிக்காகத்தான் காங்கிரஸிலிருந்து விலகி உள்ளேன்… எனவே, தன்னை பா.ஜ.க முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. ஜோதிர்ஆதித்ய சிந்தியா மத்திய அமைச்சராகிறாரா அல்லது முதல்வராகிறாரா என்பது அவரது ஆதரவாளர்களின் கேள்வியாக உள்ளது.

Jyotir Aditya Scindia

ஜனநாயகத்தை குழித்தோன்டி புதைத்து, பின்பக்க வழியாக ஆட்சியைப் பிடிக்கும் யுத்தியை பா.ஜ.க பெருமையுடன் செயல்படுத்தி வருவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஆட்சியும் அதிகாரமும் கிடைக்கின்றது என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் அமித்ஷா, மோடியின் ராஜதந்திரம் என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.