மோடியை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்

மோடியை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்

ஒவ்வொரு வருஷமும் பருவமழை பொய்த்தது என்று தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறோம். பூமி வெப்பமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் சென்னைப் போன்ற பெருநகரங்களில் பெயருக்கு கூட தண்ணீர் இருக்காது’ என்று எச்சரிக்கிறார்கள் சூழலியளார்கள். இந்நிலையில், 7 வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். 
 
licypriya

மணிப்பூரைச் சேர்ந்த மாணவி லிசிப்ரியா, சில தினங்களுக்கு முன்னால் நாடாளுமன்ற வளாகத்தில், `டியர் மிஸ்டர். மோடி அண்டு எம்.பி-க்களே.. காலநிலை மாற்றத்துக்கான சட்டத்தை உடனே நிறைவேற்றுங்கள். நம் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்’  என்று எழுதப்பட்டிருந்த பதாகையுடன்  நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. (நம் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்ததா? என்றெல்லாம் கேட்கக்கூடாது.) பாராளுமன்ற பூங்காக்களிலும், கேண்டீன்களிலும் வளைத்து வளைத்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த எந்த எம்பியுமே லிசிப்ரியா பக்கம் திரும்பாதது இன்னமும் கொடுமை தான்.

licypriya

இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி லிசிப்ரியா, சென்ற வருடம் மங்கோலியாவின் தலைநகரத்தில் நடந்த ஏஷியன் மினிஸ்ட்ரியல் கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டு இயற்கைப் பேரழிவின் ஆபத்துகளைக் குறைப்பதைப் பற்றி பேசியிருக்கிறார்.   போன வருஷம் ஏப்ரலில், ஐக்கிய நாடுகளின் சபையிலும் இதே தலைப்பில் உரையாற்றியிருக்கிறார். இந்தத் தலைப்பில் பேசுவதற்காக, ஐக்கிய நாடுகளின் சபை அழைத்திருந்த மிக இளவயது பங்கேற்பாளர் லிசிப்ரியாதான். 
 
அந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது கூட, `பூகம்பங்களாலும், வெள்ளங்களினாலும், சுனாமிகளினாலும் மக்கள் அழிவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும்போது, குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழக்கும்போதும் நான் அழுகிறேன். எல்லோரும் ஒன்று கூடுங்கள். நம் உலகத்தைக் காப்பாற்ற நாம் ஒன்று கூடுவோம்” என்று உரையாற்றியிருக்கிறார் லிசிப்ரியா. 

licypriya

ஏழு வயது சிறுமி நம் வருங்கால சந்ததியினரைக் காப்பாற்றுவோம் என்று கதறுகிற நிலையில் இருக்கிறது நம் நாடு.அப்படி ஏழு வயது சிறுமி தொண்டை தண்ணீர் வற்ற கதறியும் கண்டுக்கொள்ளாமல் காரில் செல்கிற தலைவர்களைக் கொண்டிருப்பது இன்னமும் கொடுமை.