மோடியை இந்தியாவின் தந்தை என புகழ்ந்தது பெருமை இல்லையா? அப்பம் நீங்க இந்தியனே இல்ல- மத்திய அமைச்சர் ஆவேசம்

 

மோடியை இந்தியாவின் தந்தை என புகழ்ந்தது பெருமை இல்லையா? அப்பம் நீங்க இந்தியனே இல்ல- மத்திய அமைச்சர் ஆவேசம்

மோடியை இந்தியாவின் தந்தை என புகழ்ந்தது பெருமை இல்லையா? அப்பம் நீங்க இந்தியனே இல்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆவேசமாக கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மோடி

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பின்போது, மோடி பிரதமராக வருவதற்கு முன் இந்தியா சச்சரவுகளாலும், கருத்துவேறுபாடுகளாலும் சிதறி கிடந்தது. ஒரு குடும்பத்தின் தந்தை போல் பிரதமர் மோடி அனைத்தையும் ஒன்றிணைத்தார். நாம் அவரை இந்தியாவின் தந்தை என்று அழைப்போம். அவர் ஒரு சிறப்பான வேலையை செய்துள்ளார் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

மோடியை இந்தியாவின் தந்தை என டிரம்ப் பாராட்டியதை நம் நாட்டின் சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இதற்கு பா.ஜ. மத்திய அமைச்சர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜிதேந்திர சிங்

பிரதமர் அலுவலக துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இது குறித்து கூறுகையில், பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என்று ஏற்று கொள்ளமுடியாதவர்கள் தங்களை இந்தியர்கள் என்று அழைத்து கொள்ள முடியாது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் இன்று இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறார்கள். பிரதமர் மோடியின் ஆளூமை மற்றும் தனிப்பட்ட அணுகுமுறையால் இது நடந்துள்ளது என கூறினார்.