மோடியை அன் ஃபாலோ செய்தது ஏன்? – அமெரிக்கா விளக்கம்… அதிர்ச்சியில் பா.ஜ.க

 

மோடியை அன் ஃபாலோ செய்தது ஏன்? – அமெரிக்கா விளக்கம்… அதிர்ச்சியில் பா.ஜ.க

கொரோனாவைக் கட்டுப்படுத்த மலேரியாவுக்கான மருந்தை அனுப்பாமல் இருந்தால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக மிரட்டினார்.

மோடி மற்றும் இந்தியத் தலைவர்களை ட்விட்டரில் அன் ஃபாலோ செய்தது ஏன் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருப்பது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மலேரியாவுக்கான மருந்தை அனுப்பாமல் இருந்தால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாக மிரட்டினார்.

trump-89.jpg

ஆனால், அது மிரட்டலே இல்லை என்று சாதித்த பா.ஜ.க-வினர், வெள்ளை மாளிகை பின் தொடரும் ஒரே தலைவர் மோடிதான் என்று கூறி சமாதானம் செய்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகை ட்விட்டர் அக்கவுண்ட் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத் துறை உள்ளிட்ட இந்திய தலைவர்கள், அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்குகளை அன் ஃபாலோ செய்தது. இதனால், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தனர். மிகப்பெரிய தலைவராக மோடி உருவெடுத்துவிட்டார் என்று பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்து கொண்டிருக்கும்போது அமெரிக்கா அன் ஃபாலோ செய்தது அவர்களுக்கும் அசௌகரியத்தைக் கொடுத்தது.

white-house-twiiter

அமெரிக்க அதிபர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வருவதற்கு முன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், இந்திய பிரதமர் அலுவலகம், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக ட்விட்டர் கணக்குகளை பின்தொடரத் தொடங்கியது. தற்போது இந்த பின்தொடரல் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம் ஏன் என்று  பி.டி.ஐ நிருபர் கேள்வி எழுப்பியபோது, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது, “அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளைப் பின்தொடர்வது வெள்ளை மாளிகை வழக்கம். மற்ற ட்விட் கணக்குகள் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பின்தொடரப்படும். டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தபோது, அவரது பயணம் தொடர்பாக இந்திய தலைவர்கள் வெளியிடும் தகவல் மறுபதிவு செய்ய அவர்களின் ட்விட்டர் அக்கவுண்ட் ஃபாலோ செய்யப்பட்டது. டிரம்ப் பயணம் முடிவடைந்த நிலையில் இந்திய தலைவர்களை பின் தொடர்வது நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.