மோடியையும் விட்டுவைக்கவில்லையா இந்த தமிழ் ராக்கர்ஸ்!

 

மோடியையும் விட்டுவைக்கவில்லையா இந்த தமிழ் ராக்கர்ஸ்!

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் மேன் Vs வைல்டு நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. 

மோடியையும் விட்டுவைக்கவில்லையா இந்த தமிழ் ராக்கர்ஸ்!

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் மேன் Vs வைல்டு நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்பாடங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ்  ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை மட்டுமின்றி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த நிலையில் இதை தடுக்க வேண்டும் என்று நேற்று வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களை தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

தற்போது அதற்கு எதிராக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக இடம்பெற்ற ‘மேன் Vs வைல்டு’ நிகழ்ச்சியை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை கண்ட மக்கள் மோடியையும் விட்டுவைக்கவில்லையா இந்த தமிழ் ராக்கர்ஸ்? என்று நகைச்சுவையாக கம்மெண்ட் செய்துள்ளனர்.