மோடியுடன் சந்திப்பு……காங்கிரஸை கை கழுவிய சிந்தியா….. மத்திய பிரதேசத்தில் மலர தயாராகும் தாமரை……

 

மோடியுடன் சந்திப்பு……காங்கிரஸை கை கழுவிய சிந்தியா….. மத்திய பிரதேசத்தில் மலர தயாராகும் தாமரை……

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்த பின், ஜோதிராத்திய சிந்தியா தனது காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய பிரதேச காங்கிரசின் இளம் தலைவராக திகழ்ந்தவர் ஜோதிராத்திய சிந்தியா. கடந்த மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராத்திய சிந்தியா. அவரின் கடின உழைப்புதான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி தந்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடமோ முதல்வர் பதவியை கமல் நாத்துக்கு கொடுத்தது. இதனால் சிந்தியா கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் அதுவும் நடவடிக்கை. இதனால் கட்சியின் மீது வெறுப்பில் இருந்து வந்தார்.

அமித் ஷா, சிந்தியா, மோடி

இந்நிலையில் நேற்று சிந்தியா தனக்கு விசுவாசமான 17 எம்.எல்.ஏ.க்களை யாருக்கும் தெரியாமல் கர்நாடகவுக்கு அனுப்பி வைத்தார். அவர் டெல்லியில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சா அமித் ஷாவை சிந்தியா சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர்கள் இருவரும் பிரதமரின் இல்லத்துக்கு சென்று நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அதன்பிறகு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா  செய்தார். மேலும் தனது டிவிட்டரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தையும் அதில் பதிவு செய்துள்ளார்.

பா.ஜ.க.

அந்த ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் 18 ஆண்டுகள் பணியாற்றிய பின் நான் வெளியேற வேண்டிய சரியான நேரம் இது. எனது மக்கள் மற்றும் எனது தொண்டர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கவும் உணரவும் நான் இப்போது புதுிய தொடக்கத்தை தொடங்குவதே சிறந்தது என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். இன்று சிந்தியா பா.ஜ.க.வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் காங்கிரஸ் கூடாரம் கலகலத்து உள்ளது. அதேசமயம் பா.ஜ.க.வோ கடும் குஷியில் உள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை பார்க்கும்போது மத்திய பிரதேசத்தில் அடுத்த சில நாட்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என தெரிகிறது.