மோடியுடன் கனிமொழி நேருக்கு நேர்… செம்ம டென்ஷனில் எடப்பாடி- ராகுல்..!

 

மோடியுடன் கனிமொழி நேருக்கு நேர்… செம்ம டென்ஷனில் எடப்பாடி- ராகுல்..!

பாஜக கூட்டணி கட்சியைப்போல அளவளாவிய சந்தோஷத்துடன் திமுக எம்.பிகள் பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்றார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்ட ராகுல் காந்தியும், எடப்பாடி பழனிசாமியும் செம்ம டென்ஷனில் இருக்கிறார்கள்.

அதிமுகவும், திமுகவும் பாஜகவின் கடைக்கண் பார்வைக்காக தனித்தனியாக முயற்சித்து வருகின்றனர்.  திமுக தலைவர் ஸ்டாலின் மோடியை வெளியில் விமர்சித்தாலும்,  வரும் ஐந்தாண்டு காலம் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் இருப்பது பாஜகதான் . மோடி

எனவே அவர்கள் ஆசியில்லாமல் எதுவும் செய்யமுடியாது. ஆகையால் பாஜகவின் கடைக்கண் நம் மீது பாயாதா? என காய் நகர்த்தி வருகிறார்கள்.  கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி புதிய எம்.பிகளுக்கு விருந்து வைத்தார்.  இந்த விருந்தில் திமுக எம்.பிகளான டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது டி.ஆர்.பாலு வழியச்சென்று மோடியிடம் பேசினார்.  கனிமொழி

சபாநாயகர் பதவி யேற்றபின் முதலில் மோடி வாழ்த்து சொன்னார். அடுத்ததாக வாழ்த்துச் சொன்ன டி.ஆர்.பாலு நேராக மோடியிடம் சென்று கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். தமிழகத்தில் அதிமுகவிற்கு தான்  அதிக செல்வாக்கு இருக்கிறது என்று பாஜக நினைத்திருந்தது. திமுகவிற்கு தான் இப்போது செல்வாக்கு இருக்கிறது. எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்பதுதான் இதன் அர்த்தம். ஈபிஎஸ்

பிரதமர் மோடி அளித்த விருந்தில் திமுக எம்.பிக்கள் கலந்து கொண்டதோடு நேருக்கு நேர் அமர்ந்து பிரதமர் மோடியியிடம்  சில நிமிடங்கள் புன்னகை பூக்கப் பேசினார் கனிமொழி.  தங்களது காங்கிரஸ் கூட்டணி கட்சி படுதோல்வி அடைந்ததை மறந்து விட்டு பாஜக கூட்டணி கட்சியைப்போல அளவளாவிய சந்தோஷத்துடன் திமுக எம்.பிகள் பிரதமர் மோடியுடன் விருந்தில் பங்கேற்றார்கள். 

இதையெல்லாம் கேள்விப்பட்ட ராகுல் காந்தியும், எடப்பாடி பழனிசாமியும் செம்ம டென்ஷனில் இருக்கிறார்கள்.