மோடியுடன் இன்று ரகசிய சந்திப்பு… தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் பொறுப்பை ஏற்கும் ரஜினி…

மோடியுடன் இன்று ரகசிய சந்திப்பு… தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் பொறுப்பை ஏற்கும் ரஜினி…

பா.ஜ.க.வின் முக்கிய பல தலைவர்களும், மத்திய அமைச்சர்களில் சிலருமே மோடியின் பதவியேற்பு விழாவில் ஆறாவது, ஏழாவது வரிசைகளில் அமரவைக்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அவரது மனைவி லதாவும் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டது ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் மோடியை தனிமையில் சந்தித்து உரையாட இருப்பது ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தை உலுக்கியிருக்கிறது.

rajini and modi

தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஒரிஜினல் விசுவாசி யார் என்கிற பட்டிமன்றம் ஜெ’ மறைவுக்குப் பின் சூடுபிடித்திருக்கும் நிலையில், அதற்கு சரியான தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டதையே ரஜினியின் முதல் வரிசை மரியாதை காட்டுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுபயங்கரமாக மண்ணைக் கவ்வியிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க.வினர் எப்போதுமே வெத்துவேட்டுக்கள்தான் என்று இந்தத் தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னிந்தியாவிலும் தாமரையை மலர வைத்தே தீருவது என்கிற முடிவில்தான் ரஜினியை நோக்கி உறுதியான காயை நகர்த்துகிறாராம் மோடி.

rajini

ரஜினியை இன்று விருந்தளித்து தனிமையில் உரையாட இருக்கும் மோடி, தனிக்கட்சி துவங்கி பின்னர் கூட்டணி வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது நேரடியாகவே பா.ஜ.க.வுக்கு வந்தாலும் சரி இருகரம் கூப்பி கட்சி ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறாராம். முழுக்க நனைஞ்ச பிறகு இனி முக்காடு எதற்கு என்ற முடிவில் இருக்கும் ரஜினியும் இனி தமிழகத்தில் தாமரையை மலர வைக்கும் பொறுப்பை ஏற்க மானசீகமாகத் தயாராகிவிட்டாராம். 

rajinikanth

ஆனால் இந்தச் சந்திப்பு குறித்து ரஜினி ரசிகர் மன்றத்தினரின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. ரஜினி வெளிப்படையாக பா.ஜ.க.வை ஆதரிக்கும் பட்சத்தில் அவரது முயற்சி கந்தக பூமியில் தாமரையை மலரவைக்கும் முயற்சியாகவே இருக்கும் என்றும் இதனால் அவரது செல்வாக்கு தரைமட்டத்துக்கு இறங்கி தமிழிசை, ஹெச்.ராஜாக்கள் வரிசைக்கு வந்துவிடுவார் என்றும் பயந்து நடுங்குகின்றனர்.