மோடியின் வாயை மூடச்சொல்லி தேர்தல் கமிஷனுக்கு ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கடிதம்…

 

மோடியின் வாயை மூடச்சொல்லி தேர்தல் கமிஷனுக்கு ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கடிதம்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் கூறிவரும் மோடி இத்தோடு தன் பேச்சை நிறுத்திக்கொள்ளவேண்டும் என காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தேர்தல் கமிஷனுக்கு தனது ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் கூறிவரும் மோடி இத்தோடு தன் பேச்சை நிறுத்திக்கொள்ளவேண்டும் என காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தேர்தல் கமிஷனுக்கு தனது ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளார்.

modi

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்தார். “ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய இறுதிகாலத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தார்” என்று குற்றம் சாட்டி பேசினார். ரஃபேல் விவகாரத்தில் மோடியை ராகுல் காந்தி விமர்சிப்பதால், அதற்கு பதிலடியாக ராகுலின் தந்தையான ராஜீவ் காந்தி மீது மோடி குற்றம் சாட்டி பேசினார்.

 

election commission

மோடியின் அந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸார் தேர்தல் கமிஷனில் தொடர்ந்து புகார் அளித்தனர். அப்புகார்களைப் பொருட்படுத்தாத தேர்தல் கமிஷன் , ‘மோடி பேசியதில் எந்த விதி மீறலும் இல்லை’ எனவிளக்கம் அளித்தது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த மனோஜ் கஷ்யப் என்ற இளைஞர், மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளார்

அட்லீஸ்ட் ‘90 எம்.எல்’ ரத்தமாவது செலவாகியிருக்கும் என்று நம்பப்படும் அக்கடிதத்தில்…“முன்னாள் பிரதமர், ராஜீவ்காந்தி ஏழைகளின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை நாட்டில் அமல்படுத்தினார். நம் நாட்டில், கம்ப்யூட்டர் புரட்சிக்கு வழி வகுத்தார். ஓட்டளிக்கும் வயதை 18 ஆகக் குறைத்து, இளைய தலைமுறையினரும் ஓட்டளிக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்.

letter

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட, ராஜீவ்காந்தியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட ராஜீவைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இவ்வாறு பேசாமல் இருக்கும்படி, மோடிக்கு உத்தரவிட வேண்டும்” என ராஜீவ் மீது ரத்தபாசம் காட்டியுள்ளார்.

தற்போது வலைதளங்களில் வைரலாகிவரும் அக்கடிதத்துக்குக் கீழே ‘ரத்தமா அது தக்காளிச் சட்னி மாதிரி தெரியுதே’ என்று பக்தாஸ் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.