மோடியின் முகம் ஒளிர்வது எப்படி? அவரே வெளியிட்ட ரகசியம்!!.

மோடியின் முகம் ஒளிர்வது எப்படி? அவரே வெளியிட்ட ரகசியம்!!.

நாடெங்கும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து ‘ பிரதான்மந்திரி பால் புரஸ்கார்’ விருது பெற்ற சிறார்களை தனது இல்லத்தில் சந்தித்தார் மோடி. அப்போது இளம் வயதிலேயே அந்தக் குழந்தைகள் வெளிப்படுத்தி இருக்கும் திறனும், உழைப்பும்தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அது தனக்கு சக்தியும் உந்துதலும் தருவதாகச் சொன்னார்.

modi-speech-with-students

வாழ்க்கையில் வெற்றியாளர்கள் இரண்டு வகை என்ற மோடி, முதல் வகையினர் ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெற்றதும் தலைக்கனம் கொண்டு, யாரோடும் கலந்து பழகாமல் உழைக்க மறந்து தேங்கி நின்று விடுகிறார்கள். இன்னொரு வகையினரோ தங்களது வெற்றிக்கு கிடைக்கும் பாராட்டுகளைப் பெற்று அதை ஒருபுறம் வைத்துவிட்டு தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்றார்.
அப்போதுதான் தனது முகஅழகின் ரகசியத்தை வெளியிட்டார் பிரதமர். முன்பொருநாள் யாரோ மோடியிடம் உங்கள் முகம் இப்படி ஒளிர்வதின் ரகசியம் என்ன என்று கேட்டார்களாம். அதற்கு மோடி, நான் கடுமையாக உழைப்பேன், அப்போது முகம் வியர்க்கும். நான் அந்த வியர்வையொடு முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் தான் என் முகம் பளிச்சென்று இருப்பதாகச் சொன்ன மோடி, குழந்தைகளும் ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்க்கும் படியான செயல்களில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.