மோடியின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

 

மோடியின் நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா?

கொஞ்சநாள் முன்னால் பாபா ராம்தேவ் வழக்கம்போல மோடியைப் பற்றித் தூக்கி வாசிக்கும் போது ஒரு புது புகழ் மொழியை எடுத்து விட்டார்.’ மோடி ஒரு ராஷ்ட்ர ரிஷி’! 

அது மோடியின் 56 இஞ்ச் நெஞ்சை நெகிழ்த்தி இருக்க வேண்டும்.
பாபா ராம் தேவ் சொன்னது வழக்கம்போல அவரது கம்பெனிக்கு ஒரு புரமோதான் என்று மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்க காசியைச் சேர்ந்த ‘காசி வித்வத் பரிஷத்’ என்கிற

கொஞ்சநாள் முன்னால் பாபா ராம்தேவ் வழக்கம்போல மோடியைப் பற்றித் தூக்கி வாசிக்கும் போது ஒரு புது புகழ் மொழியை எடுத்து விட்டார்.’ மோடி ஒரு ராஷ்ட்ர ரிஷி’! 

modi

அது மோடியின் 56 இஞ்ச் நெஞ்சை நெகிழ்த்தி இருக்க வேண்டும்.
பாபா ராம் தேவ் சொன்னது வழக்கம்போல அவரது கம்பெனிக்கு ஒரு புரமோதான் என்று மற்றவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்க காசியைச் சேர்ந்த ‘காசி வித்வத் பரிஷத்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த சிலர் மோடிக்கு ‘ராஷ்ட்ர ரிஷி ‘ பட்டம் வழங்கப்பட இருப்பதாக அறிவித்தனர்.

அந்த அமைப்பு மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் இருப்பதால் மோடியே ‘ கேட்டு’ வாங்கிக் கொண்டதாக பேச்சு கிளம்பியது.அதைத் தொடர்ந்து காசி வித்வத் பரிஷித்தின் பொதுச் செயலாளர் சிவாஜி உபாத்யாயா பத்திரிகையாளர்களை சந்தித்து,தங்களது அமைப்பு மோடிக்கு பட்டம் ஏதும் அளிப்பதாக சொல்லவில்லை என்றும்,அப்படியாராவது சொல்லியிருந்தால் அது தங்கள் பொதுக்குழுவின் மூன்றில் இரண்டுபங்கு கோரம் இல்லாமல் எடுத்த தீர்மானம் என்றும் சொன்னார்.

modi

அதே அமைப்பின் உறுப்பினரான ரிஷி திரிவேதி என்பவர் இன்னும் ஒருபடி மேலே போய் அவங்களுக்கு பட்டம் கொடுக்கவே தெரியவில்லை. அது ராஷ்டர ரிஷியல்ல ‘ராஜரிஷி’ என்றுதான் சொல்ல வேண்டும்.அப்போதுதான் நாடாளும் துறவி என்று பொருள் வரும் என்றார்.

இந்த அமைப்பு ஏற்கனவே முன்னால் பிரதமர் வி.பி.சிங்குக்கு இப்படி ராஜரிஷி பட்டம் கொடுத்திருக்கிறது.ஆனால் அவர் மண்டல் கமிஷன் தீர்மானத்தை அமல் படுத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் அந்த பட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக அறிவித்தது.ஆனால்,சிங் ஒருமுறை கூட அந்தப் பட்டத்தை தன் பெயரோடு சேர்த்துக் கொண்டதில்லை.

ஆனால்,நம்ம செளகிதார் அப்படியல்ல ,அவருக்கு நோபல் பரிசு முதல் நம்ம ஊர் கலைமாமணி வரை எது கொடுத்தாலும் ஓ.கேதான்.நேற்று மாலத்தீவு அவருக்கு கொடுத்த