மோடியின் தடையையும் மீறி… ஓராண்டு நிறைவைக் கொண்டாடத் துடிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

 

மோடியின் தடையையும் மீறி… ஓராண்டு நிறைவைக் கொண்டாடத் துடிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததின் முதலாமாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் விடாப்பிடியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததின் முதலாமாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் விடாப்பிடியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆறு ஆண்டுகளாக மோடி பிரதமராக உள்ளார். கடந்த ஆண்டு மே 30ம் தேதி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததன் முதலாமாண்டை கொண்டாட வேண்டும் என்று பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் விரும்புகின்றனர். 

bjp-victory

இது பற்றி பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டாவிடம் பல்வேறு மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஓராண்டில் கொண்டுவரப்பட்ட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பிரசார இயக்கம் நடத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் கொரோனா காரணமாக அவதியுற்று வரும் நிலையில் முதலாமாண்டு கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று மோடி, அமித்ஷா கூறியுள்ளனர். 

jp-nadda

ஆனாலும், பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் மோடி, அமித்ஷாவின் பேச்சை ஏற்றதுபோல் இல்லை என்று கூறப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், இந்த நேரத்தில் நம்முடைய சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் முதலாமாண்டு கொண்டாட்டம் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. மோடியின் உத்தரவை மீறி கொண்டாட்டத்தில் இறங்கினால் அது மக்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.