மோடியின் செல்லமான ஆர்டர்; பாஜக வேட்பாளாரானார் அஜித் அண்ணன்?!

 

மோடியின் செல்லமான ஆர்டர்; பாஜக வேட்பாளாரானார் அஜித் அண்ணன்?!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் இருந்து திருச்சூர் (கேரளா) வேட்பாளராக சுரேஷ் கோபியை அறிவித்துள்ளனர். ஆங்காங்கே நடிகர்களை களமிறக்கி வருகிறது பாஜக, ஹேம மாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் பாஜக முகங்களான நிலையில், சுரேஷ் கோபி திருச்சூரில் நிற்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீனா படத்தின் அஜித் அண்ணனாக நடித்தவர் சுரேஷ் கோபி. சமஸ்தானம், ஐ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சில காலம் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சுரேஷ் கோபி, அரசியலில் இறங்கினார்.

சுரேஷ்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் இருந்து திருச்சூர் (கேரளா) வேட்பாளராக சுரேஷ் கோபியை அறிவித்துள்ளனர். ஆங்காங்கே நடிகர்களை களமிறக்கி வருகிறது பாஜக, ஹேம மாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் பாஜக முகங்களான நிலையில், சுரேஷ் கோபி திருச்சூரில் நிற்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மோடி

அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கியமான நடிகர்களை வெற்றிக்காக தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது பாஜக தரப்பு. கேரளாவில் மோகன் லால்-ஐ தங்கள் பக்கம் இழுக்க பார்த்தார்கள், அது முடியாத பட்சத்தில், ஏற்கனவே இருந்த சுரேஷ் கோபியே போதும் என்று முடிவெடுத்துள்ளனர்.

கேரளாவில் பாஜகவின் டார்கெட்டாக இருக்கும் முக்கியமான தொகுதிகளில் திருச்சூர் தொகுதியும் ஒன்று. அதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதால், பிரபல முகமான சுரேஷ் கோபிக்கு மோடியே பேசி நிற்க சொல்லியிருக்கிறார்.

மோடி

2016-ஆம் ஆண்டு மோடியை சந்தித்த சுரேஷ் கோபிக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரதாபன் மற்றும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் ராஜாஜி மேத்யூவிற்கு சுரேஷ் கோபி கடும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் வாசிங்க

அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் துவங்கிவிட்டேன்; #HBDPrabhuDeva