மோடியின் சகோதரர் திடீர் தர்ணா… ஏன் தெரியுமா?

 

மோடியின் சகோதரர் திடீர் தர்ணா… ஏன் தெரியுமா?

தனது பாதுகாவலர்களுக்கு தனி வாகனம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது பாதுகாவலர்களுக்கு தனி வாகனம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து ஜெய்பூருக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த பாக்ரூ காவல்நிலையத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் நடத்திய அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது பாதுகாப்புக்கு இரண்டு தனி பாதுகாவலர்களை நியமித்து அவர்களுக்கும் தனி வாகனம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். என்னுடைய வாகனத்தில் எந்த பாதுகாப்பு அதிகாரியும் வரக்கூடாது என்றும் கோரிக்கைவிடுத்தர்.

அதன்பின் ஜெய்ப்பூர் காவல் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா அவரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் பிரகலாத் மோடி அங்கிருந்து கலைந்து சென்றார். ராஜஸ்தானில் தான் எங்கு சென்றாலும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், ஜெய்பூர் காவல் ஆணையர் மட்டுமே இவ்வாறு நடந்துக்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.