மோடியின் ஏஜென்டாக செயல்படும் கேரள ஆளுநர்! – காங்கிரஸ் விமர்சனம்

மோடியின் ஏஜென்டாக செயல்படும் கேரள ஆளுநர்! – காங்கிரஸ் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மேலும், இந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

மோடி, அமித்ஷாவின் ஏஜென்ட்டாக கேரள ஆளுநர் செயல்படுகிறார் என்று கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மேலும், இந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

arif khan

கேரள மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் இதற்கு அதிருப்தி தெரிவித்தார். என்னிடம் கலந்தாலோசிக்காமல், தகவல் தெரிவிக்காமல் வழக்கு தொடர்ந்தது தவறு… நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தவறு என்று கூறியிருந்தார். இதற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் கேரள ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், “நரேந்திர மோடி, அமித் ஷாவின் ஏஜென்ட் போல கேரள ஆளுநர் செயல்படுகிறார் என்பதை மாநில முதல்வர் பினராயி விஜயன் உணர வேண்டும். மாநில சட்டமன்றத்தின் மேன்மைக்கு எதிராக செயல்படுகிறார்” என்றார்.