மோடியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹெச்.ராஜா: இந்த முறை கணக்கு தப்புப்பா!

 

மோடியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹெச்.ராஜா: இந்த முறை கணக்கு தப்புப்பா!

மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை: மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும், 12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மோடி பேசியதை தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை வழக்கம் போல் ஏற்றுக் கொண்ட ஹெச்.ராஜா வழக்கம் போல் தன் சொதப்பலை சிறப்பாக செய்துள்ளார் என்பதே வியப்பிற்குரியது. அதாவது பொது கூட்டத்தில் பேசிய மோடியின் உரையை மொழிபெயர்த்த ஹெச்.ராஜா, ‘ராமேஸ்வரம் பாம்பன் இணைப்பானது, துண்டாடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக  அந்த பாதையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது.ஆகவே தான் 21,000 கோடி செலவில் ராமேஸ்வரத்தையும், பாம்பனையும், தனுஷ்கோடியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுளோம்’ என்றார்.

ஆனால் மோடி 2100 கோடி ரூபாய் என்று கூறியதை 21,000 கோடி என்று கூறி ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதனால் அவர் பேசிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு தமிழகம் வந்த அமித்ஷா பேசிய உரையை மொழிபெயர்த்த ஹெச்.ராஜா, சொட்டுநீர் பாசனம் என்பதை சிறுநீர் பாசனம் என்று கூறி மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மாட்டிக் கொண்டார்.