மோடிக்கு 1 லட்சம் டுபாக்கூர், ராகுலுக்கு 9 ஆயிரம் ?

 

மோடிக்கு 1 லட்சம் டுபாக்கூர், ராகுலுக்கு 9 ஆயிரம் ?

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களை பின்பற்றும் டுபாக்கூர் கணக்குகளை இழந்துள்ளனர்.

புதுதில்லி: பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்களை பின்பற்றும் டுபாக்கூர் கணக்குகளை இழந்துள்ளனர்.

டிவிட்டர் நிறுவனம் போலி டிவிட்டர் கணக்குகளை நீக்கும் பணியை செய்து வருகிறது. அரசியல் பிரமுகர், திரைத்துறை சார்ந்தவர்கள் என பிரபலமான பலரும், அவர்களை பின்பற்றும் போலிக் கணக்குகளை இழந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நவம்பர் மாதம் முதல் துவங்கிய இந்த களையெடுப்பு பணியில், மோடி 1 லட்சம் பாலோயர்களை இழந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 9 ஆயிரம் பாலோயர்களை இழந்துள்ளார்.