மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம்! 

 

மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம்! 

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் வரும் 14 ஆம் தேதி ஏலமிடப்படவுள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கிவைத்தார்.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் வரும் 14 ஆம் தேதி ஏலமிடப்படவுள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தொடங்கிவைத்தார்.

பிரதமராக இராண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த பரிசுப்பொருட்களை ஏலமிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் தொகை  கங்கை நதியை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது. 

Modi

டெல்லியில் வரும் 14 ஆம் தேதி முதல் இந்த ஏலம் தொடங்கவுள்ளது. இதில் மாநிலம் வாரியாக அரசியல் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கொடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்களுடன், மோடியின் உருவப்படம், சாமி சிலைகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிற்பங்கள் போன்ற 2772 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஏலமிடப்படும். ஏலமிடப்படும் பொருட்களின் விலை குறைந்த பட்சம் 200 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய இருக்கும் என  மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.