மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான்: திருநாவுக்கரசர் பெருமிதம்

 

மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான்: திருநாவுக்கரசர் பெருமிதம்

5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என்பது நிரூபணமாகியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என்பது நிரூபணமாகியுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்த ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடித்துவருகிறது. காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில்,  5 மாநில தேர்தல் தோல்வி மூலம் பாஜக எதிர்காலத்தில் பின்னடைவை சந்திக்கும்.  காங்கிரஸ்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. இந்த முடிவுகள் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.