மோடிக்கு எதிராக மம்தா நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

 

மோடிக்கு எதிராக மம்தா நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

மோடிக்கு எதிராக மம்தா நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

கொல்கத்தா: மோடிக்கு எதிராக மம்தா நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. 

குறிப்பாக, மோடிக்கு எதிராக நாட்டின் முக்கிய தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திரிணாமூல் காங்கிரஸ் முடிவு செய்தது.

modi

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் முன்னின்று நடத்தும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதலமைச்சர்களான குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே என 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 

mamta

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்ற போதும் மம்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல்,  பாஜகவின் அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த்சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோரும் மம்தாவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

mamta

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அனைத்து கட்சிகளும் இணைந்து அறிவிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால், இந்தியா முழுவதும் இந்த பொதுக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இக்கூட்டத்தில் தலைவர்கள் பேசுவதற்காக 5 மேடைகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 20 கண்காணிப்பு கோபுரங்கள், ஆயிரம் மைக்ரோ போன்கள், 30 எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பத்தாயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.