மோசமான செயல்பாட்டால் மோடி அரசு திவால் ஆகிறது! – முன்னாள் பா.ஜ.க நிதி அமைச்சர் கணிப்பு

மோசமான செயல்பாட்டால் மோடி அரசு திவால் ஆகிறது! – முன்னாள் பா.ஜ.க நிதி அமைச்சர் கணிப்பு

மத்திய பா.ஜ.க அரசு விரைவில் திவாலாகும் என்று வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பல்வேறு சட்டங்கள், செயல்பாட்டுகள், அடக்குமுறையைக் கண்டித்து பா.ஜ.க மூத்த தலைவராக இருந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ரதயாத்திரை நடத்தி வருகிறார். காந்தி நினைவு தினத்தன்று இந்த ஊர்வலம் டெல்லியை அடைகிறது. 

மத்திய பா.ஜ.க அரசு விரைவில் திவாலாகும் என்று வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

sinha

மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பல்வேறு சட்டங்கள், செயல்பாட்டுகள், அடக்குமுறையைக் கண்டித்து பா.ஜ.க மூத்த தலைவராக இருந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ரதயாத்திரை நடத்தி வருகிறார். காந்தி நினைவு தினத்தன்று இந்த ஊர்வலம் டெல்லியை அடைகிறது. 

sinha

குஜராத் மாநிலம் வந்த அவர் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய அரசு பொருளாதார அடிப்படையில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையை எடுக்காமல், பொருளாதாரம் சரியாக உள்ளது என்று தவறான புள்ளிவிவரங்களைக் காட்டி வருகிறது. அந்த புள்ளிவிவரங்களும் உண்மையானதாக இல்லை. மத்திய அரசு தன்னுடைய இஷ்டத்துக்கு செலவு செய்து வருகிறது. இதனால், விரைவில் திவால் என்ற நிலையை மத்திய அரசு அடையும்.

crisi

பொருளாதார மந்தநிலை அனைத்து துறைகளிலும் உள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை முடங்கிப்போயுள்ளது. இந்த சூழ்நிலையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. 
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிதி அமைச்சர்கள் நடத்துவார்கள். ஆனால், இப்போது நிதி அமைச்சர் இல்லாமல் பிரதமர் நடத்துகிறார். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதற்கு இதுவே சான்று.  இவற்றை எல்லாம் மூடி மறைக்கவே குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டுவருகிறார்கள். குடியுரிமைப் பதிவேட்டையும் நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக அமித்ஷா கூறுகிறார். இவை இரண்டுமே மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சட்டங்கள் ஆகும்” என்றார்.