மோசமான ஆடையில் பிரபல நடிகை: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

 

மோசமான ஆடையில் பிரபல நடிகை: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங், மோசமான உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்ததால், நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங், மோசமான உடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்ததால், நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தாவணி பாவாடையில் நடித்துள்ள இவர் மாடர்ன் உடையிலும் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்நிலையில்  இவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  கிழிந்த ஜீன்ஸ் சட்டை போட்டபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்களோ பிச்சைக்காரர்கள் கூட நன்றாக உடை அணியும் இந்தக் காலத்தில், ரகுல் ப்ரீத் சிங் அதைவிடக் கேவலமான உடை அணிந்துள்ளதாகக் கடுமையாக  விமர்சித்துள்ளனர். 

ரகுல் ப்ரீத் சிங் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்ஜிகே திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.