மோசடியாளர்கள் மீது சைபர் பிரிவு போலீசிடம் பேடிஎம் நிறுவனம் புகார்

 

மோசடியாளர்கள் மீது சைபர் பிரிவு போலீசிடம் பேடிஎம் நிறுவனம் புகார்

ஆன்லைன் மோசடியாளர்கள் மீது சைபர் பிரிவு போலீசிடம் பேடிஎம் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

நொய்டா: ஆன்லைன் மோசடியாளர்கள் மீது சைபர் பிரிவு போலீசிடம் பேடிஎம் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

ஆன்லைன் மோசடியாளர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது மதிப்புமிக்க பணத்தை இழப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மோசடியாளர்கள் மீது நொய்டா சைபர் பிரிவு போலீசிடம் பேடிஎம் நிறுவனம் புகார் அளித்துள்ளது. மேலும் சுமார் 3500 மொபைல் எண்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் பிரிவு பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவற்றிடம் பேடிஎம் நிறுவனம் அளித்துள்ளது. இந்த 3500 எண்களின் பின்னணியில் ஆன்லைன் மோசடியாளர்கள் இருப்பதாக அந்நிறுவனம் கருதுகிறது.

paytm

அரசும், டிராயும் இணைந்து தங்களிடம் உள்ள டேட்டாபேஸ் உதவி கொண்டு ஆன்லைன் மோசடி முயற்சிகளை தடுக்கும் என்று பேடிஎம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஷார்ட் கோட்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி ஆன்லைன் மோசடிகள் நிகழ்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக பேடிஎம் நிறுவனத்தின் ஷார்ட் கோடாக Pytm என்ற வார்த்தையை மோசடியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்.எம்.எஸ் என்று நினைத்து ஏமாந்து பணத்தை இழக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பேடிஎம் நிறுவனம் களமிறங்கி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.