மோகன் லால் படத்தில் இணைந்த பிச்சைக்காரன் பட நாயகி 

 

மோகன் லால் படத்தில் இணைந்த பிச்சைக்காரன் பட நாயகி 

நடிகர் மோகன்லால் நடித்து வரும் பிக் பிரதர் படத்தில் நடிகை சட்னா  டைடஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகர் மோகன்லால் நடித்து வரும் பிக் பிரதர் படத்தில் நடிகை சட்னா  டைடஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த திரைப்படம் பிச்சைக்காரன்.  தாய் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வகையில் அமைந்துள்ள இதில் கதாநாயகியாக நடித்த சட்னா டைடஸ் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார். 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகில் என்று கலக்கி கொண்டு இருந்த இவர் தயாரிப்பாளர் கார்த்திக்கு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையொட்டி இவர் திரும்பி படங்கள் நடிக்க மாட்டார் என்று வதந்தி பரவி கொண்டு இருந்தது. 

SATNA TITUS

இந்த நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மீண்டும் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். இவருக்கு தற்போது மலையாளத் திரையுலகில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம். ஆம்..  மலையாளத்தில் லூசிபர் என்ற ஹிட் படத்தை சமீபத்தில் கொடுத்துள்ள மோகன் லால் தற்போது பிக் பிரதர் என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார்.அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சட்னா  டைடஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.