“மோகன் லாலுக்கும் ரஜினி சாருக்கும் இருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால்”… மனம் திறந்த தர்பார் வில்லன்

“மோகன் லாலுக்கும் ரஜினி சாருக்கும் இருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால்”… மனம் திறந்த தர்பார் வில்லன்

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் உடன் பணிபுரிந்த பிறகு, சுனீல் ஷெட்டி  மோகன்லால் நடிக்கும் மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் என்ற மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட் பிபலமான சுனில் இப்பொது தென்னிந்திய படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

சுனில் ஷெட்டி தற்போது பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், ஒரு நேர்காணலில், நடிகர் ரஜினிகாந்திற்கும் மோகன்லாலுக்கும் இடையிலான பொதுவான விஷயம் குறித்து பேசியுள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் உடன் பணிபுரிந்த பிறகு, சுனீல் ஷெட்டி  மோகன்லால் நடிக்கும் மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் என்ற மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட் பிபலமான சுனில் இப்பொது தென்னிந்திய படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

sunil-shetty-908

இப்படத்தின் டீஸர் குடியரசு தினத்தின்போது வெளியிடப்பட்டது, இது மலையாள ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் இருவருடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பாக்கியம் செய்தவனாக உணருகிறேன் சுனியல் ஷெட்டி கூறியுள்ளார்.

“பிரியான் சார் மற்றும் லால் சார் காரணமாக நான் முன்பு கக்ககுயில் படத்தில் நடித்தேன். லால் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றியது எனது அதிர்ஷ்டம். மோகன் லாலுக்கு ரஜினி காந்துக்கும் இடையே பொதுவான ஒரு விஷயம் என்னெவென்றால், இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள், அதை விட சிறந்த மனிதர்கள். அவர்கள் நான் இணைத்து நடித்ததிலேயே மிகவும் பணிவானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆனால் ஒரு நல்ல மனிதனாக இருப்பது மிக முக்கியமான விஷயம். என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று கூறினார்.

mohanlal-with-rajini-98

சுனில் மேலும் கூறுகையில், “எனது வாழ்க்கையில் மூன்று ஜாம்பவான்களுடன் பணியாற்றுவதில் நான் பாக்கியவானாக உணர்கிறேன் – அவர்கள் அமித் ஜி (அமிதாப் பச்சன்), ரஜினி சார் மற்றும் லால் சார்.”

மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்குகிறார்.