மோகன்லால் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகரின் தம்பி!

 

மோகன்லால் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகரின் தம்பி!

நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ள புதிய படத்தில், பாலிவுட் நடிகரின் தம்பி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

சென்னை: நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ள புதிய படத்தில், பாலிவுட் நடிகரின் தம்பி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். அதைத்தொடர்ந்து எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது மோகன்லாலை வைத்து ‘பிக் ப்ரதர்’ எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில் இதில் சல்மான்கானின் தம்பியான அர்பாஸ் கான் மலையாள சினிமாவில் முதன்முறையாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இது குறித்து அர்பாஸ் கான் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘மலையாள சினிமா லெஜண்ட் மோகன் லாலுடன் நடிக்கப்போவதும், சித்திக் போன்றவர் இயக்கத்தில் நடிப்பதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. முதல் முறையாக ‘பிக் பிரதர்’ படம் மூலம் மலையாள திரைத்துறைக்கு வருகை தருகிறேன். ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது’என்று பதிவிட்டுள்ளார்.