மோகன்லாலுடன் இணைந்த ‘சூப்பர் ஸ்டாரின்’ தம்பி: உறுதி செய்த படக்குழு!

 

மோகன்லாலுடன் இணைந்த ‘சூப்பர் ஸ்டாரின்’ தம்பி: உறுதி செய்த படக்குழு!

நடிகர் மோகன் லால் நடிக்கும் பிக் பிரதர்ஸ் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான் ஒப்பந்தமாகியுள்ளார். 

நடிகர் மோகன் லால் நடிக்கும் பிக் பிரதர்ஸ் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான் ஒப்பந்தமாகியுள்ளார். 

பிரபல மலையாள இயக்குநர் சித்திக் கடந்த ஆண்டு தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து பிக் பிரதர்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம்  துவங்க உள்ளது.இந்த படத்தில்  மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை  ரெஜினா நடிக்கிறார்.  இதன் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளைத் தாண்டி முதல் முறையாக மலையாளத்திலும் அவர் கால்பதிக்க  உள்ளார்.

 

 

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான் இணைந்துள்ளார். இன்டரஹே நடிகர் மோகன் லால் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இது குறித்து நடிகர் அர்பாஸ் கான், ‘ மோகன் லால் சார் மற்றும் சித்திக்குடன் பணிபுரிவது சூப்பர் மகிழ்ச்சியாக உள்ளது. மலையாளத்தில் இது என் முதல் படம். ஜூன் ,மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

ஆக்ஷன், காதல், காமெடி என வழக்கமான கமர்ஷியல் படமாக உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.