மொரட்டு சிங்கிளா இருந்தா மட்டும் உள்ளே வாங்க… 50% சலுகையுடன் சிங்கிள்ஸை கெளரவிக்கும் ஹோட்டல்!! 

மொரட்டு சிங்கிளா இருந்தா மட்டும் உள்ளே வாங்க… 50% சலுகையுடன் சிங்கிள்ஸை கெளரவிக்கும் ஹோட்டல்!! 

பொண்ணப்பாத்த மண்ண பாக்கும் சிங்கிள் பசங்க…. கண்ண பாத்தா ஸ்டன் ஆகாத சிங்கிள் பசங்கனு நிறைய பசங்க கெத்தா சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்… அவர்களுக்காகவே மயிலாடுதுறையில் திறக்கப்பட்டது தான் மொரட்டு சிங்கிள் ஹோட்டல்… 

கடைக்குள் புகுந்து ஒரு கூல்ட்ரிங்ஸ வாங்கிட்டு ஒரு மணி நேரமா கடலப்போட்டு, சீட்ட காலிப்பண்ணாம இருக்கிறது தான் கமிட்டெட் பசங்களோட பழக்கம்… இதபாக்கும்போது ஒரு பக்கம் சிங்கிள் பசங்க ஏக்கமா திரிஞ்சாலும்… மறுபக்கம் சிங்கிள் டா… என காலரை தூக்கிக்கொண்டு செல்பவர்களும் உண்டு. இந்த காதலலாம் எனக்கு செட் ஆகாதுன்னு சொல்லும் மொரட்டு சிங்கிள்களுக்காகவே மயிலாடுதுறையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. 

இந்த உணவகத்தின் ஒரு பகுதியை இளைஞர்களுக்காக ஒதுக்கி ஒரே ஒரு சேர், டேபிள் மட்டும் போட்டு, துணைக்கு யாருமே இல்லாத மாதிரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  மேலும் அந்த ஹோட்டலில் இன்றைய காலத்து இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தக் காலத்து விளையாட்டுகளை சுவற்றில் வரைந்து வைத்துள்ளனர்.  இந்த ஹோட்டல் தான் மொரட்டு சிங்கிள்ஸ்களின் சொர்க்க வாசலாம்…. 15 வயதிலிருந்து 30 வயதாகும் தற்போது வரை சிங்கிளாக இருக்கும் அஸ்லான் தான் இந்த உணவகத்தின் ஓனராம்…