மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து அமேசான் நிறுவனம் விலகல்

 

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து அமேசான் நிறுவனம் விலகல்

ஸ்பெயினில் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து அமேசான் நிறுவனம் விலகியுள்ளது.

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெற உள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து அமேசான் நிறுவனம் விலகியுள்ளது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சி வருகிற 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ஆனால், உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முன்னணி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து கலந்து கொள்ளாமல் விலக முடிவு செய்துள்ளன. அந்த வகையில் ஏற்கனவே தென் கொரிய நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ், ஸ்வீடன் நாட்டின் டெலிகாம் நிறுவனமான எரிக்சன், கிராபிக்ஸ் நிறுவனமான என்விடியா போன்ற நிறுவனங்கள் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டன.

ttn

இந்த நிலையில், தற்போது உலகின் மிகப்பெரும் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் வேர்ல்டு காங்கிரஸ் 2020 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.