மொபைல் போனை திருட, ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட கொள்ளையர்கள்!

 

மொபைல் போனை திருட, ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட கொள்ளையர்கள்!

வண்டியை விட்டு கவுடாவின் குடும்பத்தினரும், உதவி செய்த பயணியும் கீழே இறங்கி கவுடாவை ரயில்வந்த பாதையெங்கும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். நீண்ட தேடலுக்குப் பிறகு 4 கிலோமீட்டர் தொலைவில் கவுடா இருப்புப்பாதைக்கு அருகில் நினைவிழந்து கிடப்பதைக்கண்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் கவுடா.

மேட் கவுடா, பஞ்சாபில் பணியாற்றும் 28 வயதான ராணுவ வீரர். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த கவுடா, குடும்பத்தினருடன் மாண்டியாவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். ரயில் நயந்தனஹள்ளி ஸ்டேஷனுக்கு அருகில் வரும்போது, கழிவறைக்கு செல்வதாகச் சொல்லிச் சென்ற கவுடா நீண்ட நேரமாகியும் திரும்பாததால், கவுடாவின் மனைவி அவருடைய செல்போனுக்கு தொடர்புகொண்டிருக்கிறார். பதில் இல்லை. எனவே, கவலையடைந்த மனைவி, உடன் பயணிப்பவர்களிடம் சொல்லி பதட்டப்பட்டிருக்கிறார். உடனடியாக உதவிக்கு வந்த சகபயணி ஒருவர், உடனடியாக செயினை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தியிருக்கிறார்.

Train robbery attempt

வண்டியை விட்டு கவுடாவின் குடும்பத்தினரும், உதவி செய்த பயணியும் கீழே இறங்கி கவுடாவை ரயில்வந்த பாதையெங்கும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். நீண்ட தேடலுக்குப் பிறகு 4 கிலோமீட்டர் தொலைவில் கவுடா இருப்புப்பாதைக்கு அருகில் நினைவிழந்து கிடப்பதைக்கண்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் கவுடா. அவரின் செல்போனை திருடுவதற்கக நடந்த கொள்ளை முயற்சியில் கவுடா கீழே தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.