மொபைல் பேங்கிங் சேவையை பெற மொபைல் எண் பதிவு கட்டாயம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு!

 

மொபைல் பேங்கிங் சேவையை பெற மொபைல் எண் பதிவு கட்டாயம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட்பேங்கிங் முறையைப் பயன்படுத்துவதற்கு மொபைல்ஃபோன் எண்ணைப் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட்பேங்கிங் முறையைப் பயன்படுத்துவதற்கு மொபைல்ஃபோன் எண்ணைப் பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக நெட்பேங்கிங் முறை மூலமாக பல்வேறு முறைகேடுகள்  நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்கும்விதமாக எஸ்பிஐ சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நெட்பேங்கிங் சேவையை பயன்படுத்த மொபைல் எண் அவசியம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, அந்த வங்கி விடுத்துள்ள அறிவிப்பில், ‘டிசம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் எண் இல்லாமல் நெட்பேங்கிங் சேவையை பயன்படுத்த முடியாது. மேலும், அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது மொபைல்ஃபோன் எண்களை நெட்பேங்கிங் வசதியுடன் இணைக்க வேண்டும். டிசம்பர் 1-ம் தேதிக்குள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களின் நெட்பேங்கிங் வசதி ரத்து செய்யப்படும்’ என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.