“மொதல்ல சம்பளத்த கொடுக்க சொல்லுங்க…அப்புறம் திருப்பி தரேன்” தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா

 

“மொதல்ல சம்பளத்த கொடுக்க சொல்லுங்க…அப்புறம் திருப்பி தரேன்”   தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா

இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

நடிகை த்ரிஷா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ttn

24Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ttn

 

 

இதனிடையே த்ரிஷா பட புரொமோஷனுக்கு வர மறுத்ததாகத் தகவல் வெளியாகிய நிலையில் தயாரிப்பாளர் டி.சிவா  பரமபத விளையாட்டு பட புரொமோஷனுக்கு த்ரிஷா வர மறுத்தால், அவர் சம்பளத்தில் ஒரு தொகையைத் திருப்பி தர வேண்டும் என்று எச்சரிக்கை  விடுத்தார்.  இது கோலிவுட்  வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

 


 

 இந்நிலையில் தயாரிப்பாளர் டி. சிவாவின் இந்த எச்சரிக்கைக்கு த்ரிஷா பதிலளித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த த்ரிஷாவிடம்  இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, முதலில் சம்பளத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள். பிறகு திருப்பு தருகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.