மொகரம் பண்டிகையின் மாண்புகள்!

 

மொகரம் பண்டிகையின் மாண்புகள்!

மொகரம் பண்டிகையின் மாண்புகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

மொகரம் பண்டிகையின் மாண்புகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

 

ஜனநாயகத்தின் சிறப்பையும்,மக்களாட்சியின் மாண்பையும் காப்பதற்காக தற்போதைய ஈராக் நாட்டில் அடங்கிய கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் (ரஜி அன்) மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே முகரமாகக்(மொகரம்) கடைபிடிக்கப்படுகிறது.

 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் முகரம் தினத்தன்று ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.

 

 

இமாம் காட்டிய மனிதநேய வழியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.நபிகளார் அவர்கள் காலத்தில் மட்டுமல்ல,அதற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனித்த சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். 

 

நபிகளாரின் வாக்கின்படி மொகரம் மாதத்தின் 9 மற்றும்10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும், இந்நாளிலேநோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங்களைப் போக்கிவிடும் எனவும் நபிகள் நாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டுமெனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள். 

 

 

மொகரம் நாளில் பல்வேறு அற்புத நிகழ்வுகள் நடந்திருக்கிறது. ஆஷுரா(பத்தாம்) நாளில் தான், நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலை பெற்றார்.

 

 இப்ராஹிம்(அலை) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு கலீல் எனும் பட்டம் அல்லாஹ்வினால் சூட்டப்பட்டதும் இந்நாளில் தான் நிகழ்ந்தது. உலகின் முதல் மனிதர்கள் எனப்படுகிற ஆதம்(அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் படைக்கப்பட்டதும் இந்நாளிலே தான். 

 

 

 

நூஹ்(அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரையிறங்கியதும், யூனூஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்தநாளில்தான் நடந்தது. 

 

தாவூத்(அலை) அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்கப்பட்டதும்,சுலைமான்(அலை) அவர்கள் அரசாங்கம் மீண்டதும் இந்த நாளில் தான்.இந்தநாளில் தான் உலகம் முடிவுறும் என நபிகளாரே அறிவித்து உள்ளது இந்நாளுக்கு உரிய பெரும் சிறப்பாகும்.

 

கொண்ட கொள்கைக்காக தங்களின் சொந்த வாழ்க்கையை இழந்த அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாக ஈராக்கில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், தஜியாஸ் எனப்படும் காகிதங்கள் மற்றும் சில பொருட்களால் செய்யப்பட்ட சாட்டைகளையும், சிறுகத்தி போன்ற ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள்.

 

 

ஊர்வலத்தில் வருவோர் தங்களுக்குத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொள்வதும்,சிறுபிளேடு போன்றவற்றால் உடலில் கீறிக் கொள்வதும் வாடிக்கை.

 

இந்தியாவைப் பொருத்தவரை உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முகரம் ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறும். தமிழகத்திலும் மொகரம் பண்டிகை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.