மைனராக இருக்கும்போது கையெழுத்து வாங்கிட்டாங்க… நீதிமன்ற படி ஏறிய மகாநதி ஷோபனா

 

மைனராக இருக்கும்போது கையெழுத்து வாங்கிட்டாங்க… நீதிமன்ற படி ஏறிய மகாநதி ஷோபனா

கந்த சஷ்டி கவசம் பாடலை சிம்பொனி நிறுவனம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற மகாநதி ஷோபனாவின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது.
மகாநதி படத்தின் மூலம் பிரபலமானவர் மகாநதி ஷோபனா. அதன் பிறகு கர்நாடக இசைக் கலைஞராக மாறி கச்சேரிகள் நடத்தி வருகிறார்.

கந்த சஷ்டி கவசம் பாடலை சிம்பொனி நிறுவனம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற மகாநதி ஷோபனாவின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது.
மகாநதி படத்தின் மூலம் பிரபலமானவர் மகாநதி ஷோபனா. அதன் பிறகு கர்நாடக இசைக் கலைஞராக மாறி கச்சேரிகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 1995ம் ஆண்டு சிம்பொனி என்ற ஆடியோ நிறுவனம் மகாநதி ஷோபனாவை பயன்படுத்தி கந்தசஷ்டி கவசம் பாடலை ஒலிப்பதிவு செய்தது. மேலும், டுவிங்கிள் டுவிங்களில் லிட்டில் ஸ்டார் என்ற ஆல்பத்தையும் தயாரித்தது. இந்த இரண்டு ஆல்பங்களும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இதை 47 கோடி பேர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

chc

இந்த நிலையில், தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் தான் பாடிய பாடலை சிம்பொனி நிறுவனம் பயன்படுத்தி வருமானம் பெற்று வருவதாக மகாநதி ஷோபனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிம்பொனி தரப்பில் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மகாநதி ஷோபனா தரப்பிலோ, 13 வயதாக இருக்கும்போது சிம்பொனி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. மைனர் வயது என்பதால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று கூறப்பட்டது.

mahanithi

மேலும், தன்னுடைய அனுமதியின்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்து பாடலில் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே, அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, மகாநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை சிம்பொனி நிறுவனம் வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.