மைக்ரோ அவனில் பூரிக்கு ஏற்ற முந்திரி மசாலா

 

மைக்ரோ அவனில் பூரிக்கு ஏற்ற முந்திரி மசாலா

மைக்ரோ அவனில் பூரிக்கு ஏற்ற முந்திரி மசாலா

தேவையான பொருட்கள்: 

முந்திரிப் பருப்பு – 1 கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
மிளகாய்ததூள் – 1 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
தண்ணீர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்.

செய்முறை:

முந்திரிப் பருப்புடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மூடாமல் மைக்ரோ – ஹையில் 4 நிமிடங்கள் வைக்கவும்.

எண்ணெய் சூடாகி விடும்.  நன்றாக கலந்த முந்திரியை சூடான எண்ணெயில் போட்டு எல்லாவற்றிலும் படுமாறு சேர்த்துக் கலக்கவும்.  

அதை மைக்ரோ – ஹையில் 5 நிமிடம் முதல் 7 நிமிடங்கள் வரை வைக்கவும்.  இடையில் கலந்து விடவும்.

4 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.  இதேபோல் வேர்க்கடலையைக் கொண்டும் செய்யலாம்.