மைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்

 

மைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர்

மைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க

மைக்ரோவேவ் அவனில் சுவையான ஆலுமட்டர் பனீர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க 

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 5
பச்சைப் பட்டாணி – 1 கப்
பனீர் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
தனியாத்துாள் – 1 ஸ்பூன்
சீரகத்துாள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய்த்துாள் – 1 ஸ்பூன்
மஞ்சள்துாள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
தயிர் – கால் கப்
முந்திரிப் பருப்பு – 10
கொத்துமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து ஒரே மாதிரியான துண்டுகளாக நறுக்கவும். பட்டாணியை வேக வைக்கவும். 
 
பனீரை ஒரே மாதிரியான சதுரத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் விழுதாக அரைக்கவும்.  இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.

மைக்ரோவேவ் பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு கலந்து மைக்ரோ – ஹையில் மூடி 4 நிமிடங்கள் வைத்து அதில் எல்லாத் துாளையும் போட்டு மைக்ரோ –  ஹையில் மூடாமல் 2 நிமிடங்கள் வைக்கவும்.

இதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.  இதில் வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கைக் கலந்து தயிர் சேர்க்கவும். 

நன்கு கலந்து  மைக்ரோ – ஹையில் 4 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.  இடையில் கலந்து விடவும்.  உப்பு சேர்க்கவும்.

மைக்ரோவேவ் பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அதில் நறுக்கிய பன்னீரைப் போட்டு கலந்து மைக்ரோ – ஹையில் மூடாமல் 2 நிமிடங்கள் வைத்து அதை உருளைக்கிழங்கு பட்டாணி கலவையுடன் சேர்க்கவும்.  

எல்லாம் நன்கு கலந்து மீண்டும் 2 நிமிடங்கள் ஹை – யில் வைக்கவும்.

4 நிமிடங்கள் கழித்து முந்திரிப் பருப்பு, கொத்துமல்லித் தழை துாவி பரிமாறவும்.